சாதி பெயரை கூறி சிறுவனை கட்டிப்போட்டு தாக்குதல்- 4 பேர் கைது

 
ச் ச்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாதி பெயரை கூறி சிறுவனை கட்டிப்போட்டு தாக்குதலில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

tn

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைக்கோட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த திருமால் இவரது மகன் தருண் (வயது- 16) ஒன்பதாம் வகுப்பு படித்து விட்டு நெல் அறுவடை வண்டி கிளினராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்  பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் சுகர் மில் அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் செல்வத்திடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். அப்போது வேலை செய்யாத ஆறு நாட்களும் தருணுக்கு உரிமையாளர் செல்வம் சாப்பாடு தராமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தருண் வேலையை விட்டு நின்று விட்டார்.

இந்த நிலையில் தருணும், அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரும் பைக்கில் நேற்று இரவு சுமார் 9:30 மணிக்கு பெட்ரோல் பங்கிற்கு வந்து பைக்குக்கு பெட்ரோல் போட்டுவிட்டு, தருண் பங்க் உரிமையாளர் செல்வத்திடம் என்னை பற்றி தவறாக என் மாமாவிடம் ஏன் பேசினீங்க என்று கேட்டபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செல்வம் அவரது தந்தை ராமகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து தருணையும், அஜித்குமாரையும் தகாத வார்த்தைகளால் திட்டி இழுத்து சென்று அங்குள்ள இரும்பு கம்பியில் கட்டி வைத்து சாதி பெயரை கூறி மூங்கில் கம்பி பெல்ட் ஆகிய ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தருணுக்கு கை கால் முதுகு தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்து அஜித் குமார் தப்பி ஓடி உறவினர்களை அழைத்து வந்தார் உறவினர்கள் தருணை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் கிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்ததின் பேரில்  பெட்ரோல் பங்க் உரிமையாளர் செல்வம், செந்தில், செல்வராஜ், மற்றொரு செந்தில், ராமகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 10 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு  செய்தன. செந்தில் செல்வம் செல்வராஜ் செந்தில் நான்கு பேரையும் இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.