ஓசி ஜூஸ், ஆம்லெட் கேட்ட 4 போலீசார் இடைநீக்கம்!!

 
tn

சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி . அதே காவல் நிலையத்தில் ஜெயமாலா உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பை பகுதியில் இரவு ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள கடையில் இருந்த விற்பனையாளர்களிடம் ஜூஸ் ,பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் கேன்கள் போன்றவற்றை ஓசியில் கேட்டு இவர்கள் தகராறு ஈடுபட்டுள்ளனர்.

police

 அத்துடன் கடை உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது நான்கு  காவலர்களும் ரகலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்திய நிலையில் இவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

POLICE

இந்நிலையில் படப்பையில் இரவு ரோந்து பணியின் போது கடையில் ஓசியில் ஜூஸ் ,பிரட் ஆம்லெட், சாக்லேட் குடிநீர் கேன் கேட்டு தகராறு செய்த நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி,  ஓட்டுநர் ஜெயமாலா என இரு  பெண் காவலர்களை பணி இடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.