இந்த 4 மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறையாம்!

 
tn

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

அய்யா வைகுண்டர் சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவர் . சாதி, சமய, பேதமின்றி, சமத்துவத்தையும் தர்மத்தையும் மக்கள் மத்தியில் போதித்தவர்.  சாதாரண மனிதனாக திருச்சம்பதியில் அவதரித்த அவர் மூன்று நாட்கள் கடலுக்குள் இருந்து விஷ்ணு மகாலட்சுமி அருளோடு, வைகுண்டர் என்ற திருநாமம் பெற்று மக்களுக்கு அருள் புரிய வந்த அவதாரம் என போற்றி கொண்டாடப்படுகிறார்.

tn

ஒவ்வொரு மாதமும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.  அந்த வகையில் நாளை வைகுண்டர் 190 வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது . வைகுண்டரின் அவதார தினத்தன்று பல்வேறு ஊர்களிலிருந்து, மக்கள் பாதயாத்திரையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்புக்கு வந்து அருள் பெற்றுச் செல்வர்.

tn

இந்நிலையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி நாளை நெல்லை, குமரி ,தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு ஆதலவிளை வைகுண்ட மாமலையில் பதி தீபம் தீபம் ஏற்றப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. அத்துடன் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து  நாளை காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டர்சாமி அவதார தின ஊர்வலம் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.