உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்

 
ttn

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.  அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் நலம் விசாரித்த அவர், மருத்துவமனை நிர்வாகம் குறித்தும் கேட்டறிந்தார்.

tn

 இந்நிலையில் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த நான்கு அரசு மருத்துவமனை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட  மருத்துவ இணை இயக்குனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

tn

முன்னதாக சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய பேறுகால, பச்சிளங் குழந்தை சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து, பல் மருத்துவ சிகிச்சை பிரிவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தது குறிப்பிடத்க்கத்து.