சென்னையில் நாளை 41 மின்சார ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடங்களில் 41 புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை காஞ்சி- கடற்கரை, கடற்கரை- தாம்பரம் மார்க்கத்தில் நாளை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல் மதியம் ஒரு மணி வரை இயங்காது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி, கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடங்களில் 41 புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரையிலான ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை 41 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தென் மண்டல கோட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


