சென்னையில் 45வது புத்தக கண்காட்சி - முக்கிய அறிவிப்பு இதோ !!

 
ttn

சென்னை புத்தக கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.  இக்கண்காட்சி ஆங்கில புத்தாண்டு , பொங்கல் காலத்தில் அதாவது டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து ஜனவரி 3ஆம் வாரத்திற்குள் பத்து நாட்கள் நடைபெறுகிறது. 

ttn

இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நூல்  கண்காட்சிகளில் மிகப்பெரும் கண்காட்சிகளில் ஒன்றாக இக்கண்காட்சி விளங்குகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்தும். பன்மொழி பதிப்பகங்களும் , தமிழ்நாட்டின் முக்கியமான சில தமிழ் பதிப்பகங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.

ttn

இந்நிலையில் சென்னையில் 45வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 6ஆம் தேதி முதல்23ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும் புத்தக கண்காட்சியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் மற்றவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.