மாணவர்களே ஹேப்பி நியூஸ்... தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை? - எப்போ தெரியுமா?

 
விடுமுறை

தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 5ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

Holiday notice for schools on Oct. 16 || அக்.16ஆம் தேதி பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிப்பு

அதன்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 14,701 வேட்புமனுக்கள், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 23,354 வேட்பு மனுக்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 36,361 வேட்பு மனுக்கள் என மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று வேட்புமனுக்களை வாபஸ் பெறப்பட்டது. பெரும்பாலானவர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்ற பின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ID Card With Photo is Must for Booth Agent in Urban Local Body Elections || நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

இதனையடுத்து பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இதனையொட்டி பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நாளை ஆரம்பமாகிறது. பிப்ரவரி 16ஆம் தேதி முடிவடைகிறது. இதன் காரணமாகவும் விடுமுறை அளிக்கப்படலாம் என தெரிகிறது.