மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி 5 பேர் பலி

 
ட்

மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம்,  மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில்  கழுவேலி இடங்கள் அமைந்துள்ளன. இங்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து வருவது வழக்கம். 

இந்நிலையில், இன்று பிற்பகல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கால்நடைகளை அழைத்துக் கொண்டு பழைய மாமல்லபுரம் சாலையோரம் பகுதியில் உட்கார்ந்து உள்ளனர் தெரிகிறது. அப்போது, திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி  சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த  பெண்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அப்பகுதியை சேர்ந்த யசோதாம்மாள், லோகம்மால், கௌரி, விஜயா, ஆனந்தாயி ஆகிய ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலிஸார் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால், இச் சாலையில் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுத்துவதாகவும். அதனால், இது மாதிரியான உயிரிழப்பு ஏற்படுவதாகவும் மற்றும் விபத்தை ஏற்படுத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஓஎம்ஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் . 


இதனால், போலிஸார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். உயர் அதிகாரம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், சம்பவ இடத்துக்கு மாவட்ட சாய் பிரனித் மற்றும் சார ஆட்சியர் நாராயண சர்மா ஆகியோர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தால் அச்சாலையில் சுமார் மூன்று  மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.