11ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய 5 பேர்! சென்னையில் பயங்கரம்

 
திருமணத்தை மீறிய உறவால் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து : கணவன் உள்பட இருவர் கைது! திருமணத்தை மீறிய உறவால் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து : கணவன் உள்பட இருவர் கைது!

சென்னை சைதாப்பேட்டையில் தண்ணி கேன் போட வந்த 11th மாணவனுக்கு கத்தி வெட்டு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சைதாப்பேட்டை சேர்ந்த 15 வயது மதிக்கதக்க சிறுவன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்த சிறுவன், இன்று காலை சைதாப்பேட்டைக்கு வழக்கம்போல் தண்ணீர் கேன் போட சென்றுள்ளார். அப்போது சிறுவனை சுற்றிவளைத்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டி தப்பி சென்றது. இதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிறுவனை வெட்டியதாக 3 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்து வரும் மற்ற நபர்களையும், போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். விசாரணையில் இன்ஸ்டா ரீல்ஸ் பதிவிடுவதில் ஏற்பட்ட போட்டியே இந்த தாக்குதலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.