அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% சலுகை!!

 
corporation

அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினார் 5% சலுகை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

chennai corporation

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன.  இந்த பகுதிகளில் உள்ள கட்டிடம் மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும் , தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரியும் , தொழில் உரிமம் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் 2022- 23 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. முதல் அரையாண்டில் மட்டும் ரூபாய் 945 கோடி மொத்த வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த முதல் அரையாண்டை விட 208 கோடி ரூபாய் அதிகம். அதே போல் தொழில்வரி ஆனது 248 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்க தொகையை பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கட்டண முறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாகவும் , paytm செயலி மூலமாகவும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரி வசூலிப்பவரிடம் நேரடியாக பணத்தை செலுத்தலாம் என்றும் சென்னை மாநகராட்சி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.