கோவை L & T புறவழிச் சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடல்
கோவை எல் & டி புறவழிச்சாலையில் இயங்கும் 5 சுங்கச்சாவடிகள் மூடப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை எல் அண்டு டி பைபாஸ் சாலையில் 5 சுங்கச்சாவடிகள் வருகிற 1-ந் தேதி முதல் மூடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்து உள்ளார். எல் அண்டு டி பைபாஸ் சாலை கோவை மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கேரளா செல்வதை எளிதாக்கும் வகையில் கோவை-அவி னாசிரோட்டில் உள்ள நீலாம் பூரில் தொடங்கி மதுக்கரை வரை 28 கி.மீ.தூரத்திற்கு எல் அண்டு டி பைபாஸ் சாலை ரூ.104 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. இது தென்னிந்தியாவில் முதல் முறையாக தனியார் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட சாலை ஆகும். இந்த சாலை கடந்த 1999-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இதன்காரணமாக கேரளாவில் இருந்து தமிழகம், கர்நாடகா செல்லும் வாகனங்கள் கோவை மாநகருக்குள் வராமல் எளிதாக பெங்களூரு, சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடிந்தது. சுங்க வசூல் உரிமை இந்த சாலையை அமைத்த எல் அண்டு டி நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு சுங்கவசூல் செய்யும் உரிமம் வழங்கப் வழங்கப பட்டு இருந்தது. இதற்கான இதற்கான உரிமம் வருகிற 2029-ம் ஆண்டு வரை உள்ளது. தற்போது இருவழிச்சாலையாக உள்ள இந்த ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் கடந்த 1-ந் தேதி இந்த சாலையை தேசிய நெடுஞ் சாலை ஆணையம் வசம் ஒப்படைத்தது. இதனால் இந்த சாலையை தரம் உயர்த்தி விரிவுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே இந்தசாலையில் நீலாம்பூர் முதல் மதுக் கரை வரை உள்ள 6 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் சுங்ககட்டணத்தை வசூலித்து மத்திய அரசின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவிப்பின்படி மதுக்கரை சுங்கச்சாவடியில் புதிய கட்டண வசூல் வருகிற 1-ந் தேதி முதல் வசூலிக்கப்பட உள்ளது. அதைதவிர்த்து எல் அண்டு டி பைபாஸ் சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகள் வருகிற 1-ந் தேதி முதல் மூடப்படுகிறது. அதன்படி நீலாம்பூர் சுங்கச் சாவடி, சிந்தாமணிபுதூர் அருகே உள்ள 2 சுங்கச்சாவடி, கற்பகம் பல்கலைக்கழகம் அருகே சாலையின் இருபுற மும் உள்ள சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 சுங்கச்சாவடிகள் மூடப்படும். மதுக்கரை சுங்கச்சாவடியில் மட்டும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் கோவை பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங் கப்படும் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்து உள்ளார். எல் அண்டு டி சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடப்ப டுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


