வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் மூச்சித்திணறி பலி

 
s s

ஈரோடு அன்னை சத்யா நகரில் சாய்சரண் என்ற 5 வயது சிறுவன் மூச்சுக்குழாயில் வாழைப்பழம் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அன்னை சத்யா நகரில் சாய்சரண் என்ற 5 வயது சிறுவன்  விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அவரது தாய் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட கொடுத்துள்ளார். அதனை சாய் சரண் சாப்பிட்டபோது உணவுக் குழாய் வழியாக செல்லாமல் மூச்சுக்குழாய் வழியாக பழம் சென்றுள்ளது. மூச்சுக்குழாயில் சிக்கியதால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரது பெற்றோர், மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் சிறுவனின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழம் எடுக்கப்பட்டது.