வீட்டின் சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி! பரமக்குடியில் சோகம்
தொடர் மழை, வீட்டின் பக்கபாட்டு சுவர் விழுந்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவர் விழுந்ததில் ஐந்து வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலாய்குடி கிராமத்தில் யாதவர் தெருவில் வசித்து வரும் தம்பதி பால்ராஜ் - ஜெயலட்சுமி, பால்ராஜ் ஆடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். பால்ராஜின் ஐந்து வயது மகள் கீர்த்திகா, அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை தூங்கி எழுந்த கீர்த்திகா சிறுநீர் கழிப்பதற்காக வீட்டின் வெளியே வந்துள்ளார். அப்போது தொடர் மழை காரணமாக ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவர் விழுந்ததில் கீர்த்திகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பால்ராஜின் உறவினர் அனிதாவிற்கு லேசானம் காயம் ஏற்பட்டுள்ளது. இவர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமி கீர்த்திகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் விழுந்ததில் சிறுமி உயிர் இழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் எமனேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


