ரூபிக் கியூப் விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்த 5 வயது சிறுமி...

 
சிறுமி கோதை வாஹ்ருணி


முக்கோண வடிவ ரூபிக்ஸ் கியூப் கட்டைகளை  குறைந்த வினாடியில் அடு க்கி உலக சாதனை படைத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி.

சென்னையைச் சேர்ந்த கவுசல்யா- பிரபு தம்பதிகளின் மகள் கோதை  வாஹ்ருணி.. ஒன்றாம் வகுப்பு படித்து வரும் இவர் , சிறு வயது முதலே கணிதம், புதிர் போன்றவற்றில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.  கோதையின் திறமைகளை கவனித்த அவரது பெற்றோர்  அவற்றை ஊக்குவிக்கும் விதமாக ரூபிக் கியூப் புதிர் விளையாட்டுகளை  பழக்கியுள்ளனர்.

ரூபிக் கியூப்

 விளையாட்டாக தொடங்கிய இந்த பயிற்சி தற்போது உலக சாதனையை எட்டிப் பிடிக்கும் வரை வந்திருக்கிறது.  பல கோணங்கள்,  பல வண்ணங்களில் இருக்கும்  ரூபிக் கட்டைகளை தனது மாயாஜால விரல்களால் அழகாக வரிசைப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறார். பெற்றோர் கொல்லிக்கொடுத்ததை விளையாட்டாக மற்றும் விட்டு விடாமல், யூடியூப் மூலம் தொடர்ந்து ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார் கோதை...

 அதன் பலனாக, ஹூலோ ஹூபிங் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டு முக்கோண வடிவ ரூபிக்  கட்டைகளை 6.88 நொடிக்குள் வரிசைப்படுத்தி  கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார்.  இதற்கு முன்னதாக 13.6 நொடியில் 18 வயது வாலிபர் நிகழ்த்திய சாதனையை 6.88  நொடியில் செய்து காண்பித்து  முறியடித்திருக்கிறார்.

கோதை வாஹ்ருணி

மேலும்,  மாஸ்டர்மார்பிக்ஸ் எனப்படும் மிகக்கடினமான ரூபிக் கனசதுர கட்டையையும், ஹூலா ஹூபிங் செய்துகொண்டே 1 நிமிடம் 59 நொடிக்குள்ளும், மெகாமின்க்ஸ் எனப்படும் 8 பக்கம் கொண்ட  ரூபிக் கியூப் விளையாட்டை   3.3 நிமிடத்தில் செய்துமுடித்தும்  மேலும் இரண்டு உலக சாதனைகளை படைத்திருக்கிறார் இந்த இளம் துளிர்.. சிறுமி கோதையின் திறமைகளை அங்கீகரிக்குக் விதமாக தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது.