மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின்இணைப்பு

 
stalin stalin

தமிழ்நாட்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கி இருக்கிறார்.

stalin

தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும்,  உணவு உற்பத்தியை பெருக்கிடவும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு இலவச மின்சாரம் வழங்கியது.  முதல் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் காத்திருப்பு பட்டியில் 50 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.

MK Stalin

 இந்நிலையில் வருகிற 27 ஆம் தேதி திருச்சியில் தனியார் பொறியியல்  கல்லூரி ஒன்றில் வேளாண் கண்காட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் .அதில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அத்துடன் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கும் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.