சென்னையில் 55 கற்சிலைகள் பறிமுதல் - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்...

 
சென்னையில் 55  கற்சிலைகள் கண்டுபிடிப்பு - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்...


சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 200 ஆண்டுகள்  பழைமையான 55 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , அவை விலைமதிப்பற்றவை என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.ஏ புரத்தில் ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.  இந்த கற்சிலைகள் அனைத்தும்  சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.  அந்தச் சிலைகளை நேரில் சென்று  பார்வையிட்ட  டிஜிபி சைலேந்திரபாபு , பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, “சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் பாதி சிலைகள், சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடமிருந்து பெறப்பட்டதாக விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சென்னையில் 55  கற்சிலைகள் கண்டுபிடிப்பு - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்...

பறிமுதல் செய்யப்பட்ட கற்சிலைகள் விலை மதிப்பற்றவை. கற்சிலைகள் என்றாலும் பழமையானவை என்பதால் இவை பல கோடி மதிப்புடையவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலைகளில் வட இந்திய மொழிகளில் எழுத்துக்கள் உள்ளன.எனவே இவை தென்னிந்தியாவை சேர்ந்ததா அல்லது வட இந்தியாவை சேர்ந்ததா என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கற்சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை என கண்டறியப்பட்டு உரிய கோவில்களில் ஒப்படைக்கப்படும்.தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த அனுமன் சிலையையும் போலீசார் மீட்டு சென்னை கொண்டு வந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட அனுமன் சிலை உரிய கோவிலில் ஒப்படைக்கப்படும்.

இதுவரை அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 13 சிலைகள் கோவில்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.பறிமுதல் செய்யப்பட்ட மேலும் சில சிலைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. 1,541 சிலைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2 ஆண்டுகளில் மிகவும் பழமை வாய்ந்த 97 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக கோவில்களில் சிலைகள் கடத்தப்படுத்தவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.