ரூ.558.45 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!!

 
tn

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.558.45 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 27.02.2024 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 558 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை தீவுதிடலில் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புர பொது சதுக்கம், மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்தில் புதிய நடை மேம்பாலம், புதிய பள்ளி வளாகம் கட்டுதல், மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்துதல், விளையாட்டு மைதானத்தை புனரமைத்தல், மிதி வண்டி மற்றும் நடைபாதை அமைத்தல், கடற்கரை மற்றும் குளங்களை மேம்படுத்துதல் ஆகிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

tn


சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக இருந்து, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது. சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைகேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
அந்த வகையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை தீவுதிடலில் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புர பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புர வசதிகளை கொண்ட கட்டடம்; செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 90 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையம்; செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் 74 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்தை கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துடன் இணைக்கும் வகையில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி;
சென்னை, திருவொற்றியூரில் 41 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரையை மேம்படுத்தும் பணிகள்; சென்னை, தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை 26 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணி; சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் 23 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டி பாதை மற்றும் நடைபாதை அமைக்கும் பணி:

govt
சென்னை ஆலந்தூரில் 18 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக் கூடம் கட்டும் பணி; சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் 16 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டி பாதை மற்றும் நடைபாதை அமைக்கும் பணி; திருவள்ளுர் மாவட்டம், புழல், மகாலட்சுமி நகரில் 14 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு புதிய பள்ளி வளாகம் கட்டும் பணி; சென்னையில், இரட்டை ஏரி, வில்லிவாக்கம், பாடி மற்றும் வடபழனி ஆகிய இடங்களில் 14 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி; சென்னை வெளிவட்ட சாலையான மீஞ்சூர், வெள்ளனூர், குன்றத்தூர் மற்றும் வரதராஜபுரத்தில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 உடற்பயிற்சி பூங்காக்களை மேம்படுத்தும் பணி; சென்னை, எண்ணூரில் 13 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தினசரி காய்கறி சந்தை மற்றும் சமுதாயக் கூடம் புதுப்பிக்கும் பணி; சென்னை, கவியரசு கண்ணதாசன் நகரில் 13 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி; சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் 12 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சலவைக் கூடத்தை மேம்படுத்தும் பணி;

stalin


சென்னை, ஷெனாய் நகர், மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை 10 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி; திருவள்ளுர் மாவட்டம், அன்னனூர், கோணம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 கோடி கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி; சென்னை, பெரும்பாக்கத்தில் 8 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்காவை மேம்படுத்தும் பணி;சென்னை, கோட்டூரில் 8 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சி விளையாட்டுத் திடலை மேம்படுத்தும் பணி; திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஆவடி நெடுஞ்சாலையில் 7 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் கட்டும் பணி; சென்னை, ராமாபுரத்தில் 7 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்காவை மேம்படுத்தும் பணி;

சென்னை, பெரம்பூர், முல்லைநகர் பேருந்து நிலையத்தை 6 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி; செங்கல்பட்டு மாவட்டம், பம்மல், ஈஸ்வரி நகரில் 5 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைக்கும் பணி; சென்னை, கோடம்பாக்கம், புலியூர் கால்வாய் கரையை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுபடுத்தும் பணி; காஞ்சிபுரம் மாவட்டம், முடிச்சூர் ஊராட்சியில் இரங்கா நகர் குளத்தை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி; சென்னை, தியாகராய நகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தை 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி; திருவள்ளுர் மாவட்டம், புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் 3 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானத்தை புனரமைக்கும் பணி; என மொத்தம் 558 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.