5வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு - சென்னை ஐசிஎப்பில் ஆய்வு

 
v

சென்னை - மைசூர் இடையே இயக்கவிருக்கும் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணியை சென்னை ஐ. சி. எப் ரயில்வே ஆலையில்  ரயில்வே வாரிய தலைவர் வி. கே. திரிபாதி இன்று ஆய்வு செய்கிறார். 

i

 ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் பயணியர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.   இந்த ஐசிஎப் ஆலையில் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணியுங்கள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.    இந்த தயாரிப்பு பணியை ரயில்வே வாரிய தலைவர் வி. கே. திரிபாதி இன்று ஐசிஎப் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார் .

சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு மைசூருக்கு இடையே இந்த ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சேவை நவம்பர் 10ஆம் தேதி தொடங்க இருக்கிறது.   இதற்கான தொடக்க விழா மைசூரில் நடைபெற இருக்கிறது . 

f

அதேபோல் சென்னை -அரக்கோணம், ஜோலார்பேட்டை தடத்தில் வந்தே பாரத் ரயில் இயங்கும் வகையிலும் தெற்கு ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.