ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி..!!

 
ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி..!! ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி..!!

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5வயது  சிறுவன் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மேலப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நிஜாம்.  இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.  நிஜாமின் தாய், தந்தை, மனைவி மற்றும் மகன் ரியாஸ் ஆகியோர்  மேலப்பாளையத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  நேற்று இரவு ரியாஸின் தாத்தா,  பாட்டி   இருவரும் கடைக்கு சென்றபோது  ரம்புட்டான் பழத்தை வாங்கி வந்துள்ளனர்.  அதனை தங்களது பேரனுக்கும் கொடுத்துள்ளனர்.  இதனை இரவு நேரத்தில் சிறுவன் ரியாஸ் ஆர்வமாக சாப்பிட்டுள்ளார்.  அப்போது ரம்புட்டான் பழத்தின் விதை சிறுவனின் தொண்டையில் சிக்கி உள்ளது.  அடுத்து சிறிது நேரத்திலேயே சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. 

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி..!!

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  சிறுவனை அருகில் உள்ள மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதரி அழுத சம்பவம் காண்பவரே கலங்க செய்தது. மேலும் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மேலப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.