சபரிமலையில் 10 நாட்களில் 6.30 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

 
சபரிமலை

சபரிமலை மண்டல பூஜைக்காக நடை திறந்து பத்தாவது நாளான இன்றுவரை 6.30 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை

கடந்த ஆண்டு மண்டலகால பூஜைக்காக நடை திறந்த போது 10 நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஆறரை லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த  வெள்ளிக்கிழமை அன்று 80,000 மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ள போதும் தேவசம் போடும் காவல்துறையினரும் எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமான முறையில் ஐயப்ப பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து திரும்பி செல்கிறார்கள். இன்றும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தாலும் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்து நெய்யபிஷேகமும் செய்து திரும்பி செல்கின்றனர். சபரிமலையில் 12 விளக்குக்கு பிறகு கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் தேவசம் போடும் காவல்துறையினரும் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.