திருவள்ளூரில் 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

 
“திருவள்ளூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு” – திமுக தலைமை அறிவிப்பு! “திருவள்ளூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு” – திமுக தலைமை அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் எஸ் ஐ ஆர் சீரமைப்பு பிறகு    6,19,777 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

voter id card


திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி  கடந்த நவம்பர் 4 ந் தேதி தொடங்கி டிசம்பர் 14 வரை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயில், அம்பத்தூர் மாதவரம், திருவெற்றியூர் என 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கியுள்ளது. இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டாரங்கள் அனைத்து கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் எஸ் ஐ.ஆர் படிவம் கொடுப்பதற்கு முன்பு 35,82,226 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு 6,19,777 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 29,62,449 வாக்காளர்கள் குறைந்துள்ளது. அதாவது 10 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 17.3  சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மதுரவாயில் சட்டமன்ற தொகுதியில் 4,42,775 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் எஸ்.ஐ. ஆர் படிவம் மூலமாக 1,17,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். மாதாவரம் சட்டமன்ற தொகுதியில் 4,95,826 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் 1,09,499 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்,

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3,74,353 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் 69,842 வாக்காளர்கள் நீக்கப்பட்டும், ஆவடி சட்டமன்ற தொகுதியில் 4,70,737 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் 68,044 வாக்காளர்கள் நீக்கப்பட்டும். குறைந்தபட்சமாக திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 2,82,731 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் எஸ் ஐ ஆர் படிவம் மூலமாக 30,577 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 10 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் இறந்தவர் வாக்காளர்கள் 1,35,220 வாக்காளர்களும் , முகவரி மாற்றம் செய்தவர்கள் 4,64,120 வாக்காளர்களும் இரட்டைப்பதிவன் கொண்ட வாக்காளர்கள் 20,437 பேரும் என  மாவட்டத்தில் 6,19,777 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ் ஐ ஆர் திருத்தம் முன்பு 10 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 3699 வாக்குச்சாவடிகள் இருந்து வந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பிறகு 4005 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்கள் 17,61,262 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில், அது எஸ்ஐஆர் பிறகு 14,53,543 குறைந்துள்ளது. பெண் வாக்காளர்கள் 18,20,157 இருந்து வந்த நிலையில் 15,08,306 குறைந்துள்ளது. மூன்றாம் பாலினத்தனர் 807 இருந்து வந்த நிலையில் 600 ஆக குறைந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடப்பட்டவர்கள் படிவம் -6 பெற்று நாளை முதல்  ஜனவரி 18 தேதி வரை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.