"சென்னையில் 65% மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது" - ராதாகிருஷ்ணன் பேட்டி!!

 
Radhakrishnan

சென்னையில் 65% மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா  தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.  அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்த மெகா தடுப்பூசி முகாம்  நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி இன்று 14வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.  50 ஆயிரம் மையங்களில் இன்று நடத்தப்படும் தடுப்பூசி முகாம் , காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.  சென்னையை பொருத்தவரை 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

corona virus

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் 1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன; மக்கள், தயக்கம் காட்டாமல் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

radhakrishnan

தொடர்ந்து பேசிய மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், " கொரோனா  குறையாத நிலையில் சென்னையில் 65 சதவீதம்பேர் மாஸ்க் அணிவது இல்லை. தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.101 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் 65 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாமல் சுற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.