தமிழகத்தில் அரசு வேலைக்காக 67.60 லட்சம் பேர் காத்திருப்பு..

 
வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில்  67 லட்சத்து  60 ஆயிரம் பேர் அரசு  வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது.  

பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தவரகள் அரசு வேலைக்காக தங்களது விவரங்காளை அளித்து, வேலைவாப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பார்கள். இதனை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அப்படி புதுப்பிக்க தவறுபவர்களுக்கு 2 மாதங்கள் சலுகை வழங்கப்படுகிறது.  அப்படி  தமிழகத்தில்  நவம்பர் மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக  காத்திருப்போர் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 62 ஆயிரத்து 875 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 28 லட்சத்து 30 ஆயிரத்து 917 பேரும் பதிவு செய்து உள்ளனர்.

பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் : வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் பதிவு செய்யலாம்!

அதேபோல்,  31 முதல் 45 வயது வரையில்   18 லட்சத்து 31 ஆயிரத்து 842 பேரும்,   46 முதல் 60 வயது வரை வயது வரையிலாவர்கள்  2 லட்சத்து 30 ஆயிரத்து 105 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 624 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்து இருக்கின்றனர்.  மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 73 ஆயிரத்து 632 பேரும், பெண்கள் 38 ஆயிரத்து 133 உள்பட 1 லட்சத்து 11 ஆயிரத்து 765 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ஆயிரத்து 129 பேரும், பெண்கள் 5 ஆயிரத்து 500 பேர் உள்பட 17 ஆயிரத்து 629 பேர் பதிவு செய்துள்ளனர்.  

காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 486 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 516 பேர் உள்பட 14 ஆயிரத்து 2 பேர் பதிவு செய்துள்ளனர். அதே போல், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 39 ஆயிரத்து 951 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 15 நபர்கள் என மொத்தம் 67,61,363 பேர்  பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.