உக்ரைனில் இருந்து தப்பிய 6 தமிழக மாணவர்கள்.. இந்திய மாணவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை..

 
உக்ரைனில் இருந்து தப்பிய 6 தமிழக மாணவர்கள்.. இந்திய மாணவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை..- விஸ்வா

கூடுதல் கட்டணம் செலுத்தி தமிழக மாணவர்கள் 6 பேர் உக்ரைனில் இருந்து தப்பி வந்துள்ளனர். தன்னுடன் படிக்கும் ஏரளாமன இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாயகம் திரும்பிய மாணவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 2வது நாளாக போர் தொடுத்து வருகிறது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தொடந்து  உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றிய ரஷ்யா குண்டு மழைகளை பொழிந்து வருகிறது.  பதற்றமாக சூழல் காரணமாக மக்கள் பதுங்கு குழிகளிலும், சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அதேநேரம் அங்கு சிக்கித் தவிக்கும் பிற நாட்டவர்களை மீட்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. உக்ரைன் வான்வெளி தடை செய்யப்பட்டுள்ளதால், தமிழகம் உள்பட இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Ukraine -உக்ரைன்

ஒருமாதமாக போர்பதற்றம் இருந்து வருவதால் முன்னதாகவே பல்வேறு அரசுகள் தங்களது மக்களை உக்ரைனில் இருந்து வெளியேறும்படி அறிவித்தது. அப்படி 6 தமிழக மாணவர்கள் உக்ரைனில் இருந்து தப்பி வந்துள்ளனர்.  அதில் விருதுநகர்   ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் விஸ்வா என்பவர்  உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.  கடந்த 18-ந்தேதி இந்திய தூதரகம் இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம் என அறிவித்ததை அடுத்து, விஸ்வாவும் அவரது நண்பர்களும் தாயகம் திரும்பியுள்ளனர். மொத்தமுள்ள 9 தமிழக மாணவர்களில் 6 பேர் கடந்த 18 ஆம் தேதி  ஏர் அரேபியா விமானம் மூலம் சார்ஜா வந்து, பின்னர் அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர்.

ரஷ்யா-உக்ரைன் போர்

 பொதுவாக இந்தியாவிற்கு வந்து திரும்ப விமான கட்டணம் 42 ஆயிரம் ரூபாய்தான் ஆகுமாம்.  ஆனால் போர் பதற்றம் காரண்மாக  உக்ரைனில் இருந்து இந்தியா  வர விமானத்தில் வருவதற்கு மட்டுமே 50 ஆயிரம் ரூபாய் கட்டாணம் கேட்டதாக விஸ்வா கூறிகிறார். தானும் தன்னுடன் படிக்கும் வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேரும்  கூடுதல் பணம் கொடுத்து இந்தியா வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன்

தான் படித்த கல்லூரியில் ஏராளமான இந்திய மாணவர்கள் உள்ளனர் என்றும்  தமிழக மாணவர்கள்ளும் பலர்  படித்து வருவதாக கூறிய விஸ்வா,  ரஷ்யா தாக்குதல் நடத்தும்  தலைநகர் கீவ்வில் தான் தங்கள்  கல்லூரியும் இருப்பதால்  மிகுந்த அச்சமாகவும்,  நண்பர்களின் நிலை குறித்து  கவலையாக  இருப்பதாகவும் கூறினார். தங்களது கல்லூரியின் அருகே  ஏராளமான போர் விமானங்கள் பறந்து செல்வதாகவும்,சாலைகளில் பீரங்கிகளுடன் வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன என்றும்   அங்குள்ள தன்னுடன் பயிலும் மாணவர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.  இந்திய மாணவர்களை இங்கு அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.