ஜனவரி 6ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

 
cuddalore

ஜனவரி ஆறாம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

local holiday

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் திருமஞ்சன திருவிழா மற்றும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் . ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும்.  மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவபெருமான் களி உண்ண சென்றதாக கூறப்படுகிறது.  இன்றைய தினமே ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுகிறது.  ஆருத்ரா தரிசனம் திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் வெகு விமர்சையாக தொடங்கியது.

tn

தினந்தோறும் இறைவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் நிலையில் நாளை முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.  தேரோட்டத்தை முன்னிட்டு தனித்தனி தேர்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர்.இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடக்கும் நிலையில் ஜனவரி 6ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.