தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!!

 
jail

மறைந்த முன்னாள்  முதல்வர் அண்ணாவின்  பிறந்த நாளை ஒட்டி தமிழக சிறைகளில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

prison

அண்ணா பிறந்தநாளை ஒட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மத மோதல், சாதி மோதலில் ஈடுபட்டவர்கள், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள  மத்திய சிறைகளிலிருந்து தேர்வான கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

jail

இந்நிலையில் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதல் கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  புழல் மத்திய சிறை 13, வேலூர் மத்திய சிறை 2 , கடலூர் மத்திய சிறை 5,சேலம் மத்திய சிறை 1, கோவை மத்திய சிறை 12, திருச்சி மத்திய சிறை 12, மதுரை மத்திய சிறை 22, திருச்சி பெண் சிறை 2, புழல் பெண் சிறை 2, புதுக்கோட்டை சிறை 4 என மொத்தம் 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலையாகியுள்ளனர் .