மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு : சௌமியா அன்புமணி..!

 
1

பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமக 10 இடங்களில் போட்டியிடுகிறது.அதிலும் தங்களின் வன்னியர் சமூக வாக்குகள் அதிகமுள்ள தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி தனது மனைவி சௌமியாவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியாஅன்புமணி, எங்கள் கூட்டணிக்கு பெண்கள் மத்தியில் மட்டுமல்ல. அனைத்து தரப்பினரிடம் இருந்தும் வரவேற்பு இருக்கிறது.வெற்றி வாய்ப்பை தருகிறோம் என்று மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் தர்மபுரி மாவட்டத்தில் நீர் மேலாண்மைக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இதையடுத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுப்பேன். மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாக இருக்கும்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் கிடப்பில் உள்ள திட்டங்கள் மட்டுமின்றி, நல்ல பல புதிய திட்டங்களும் மக்களுக்கு நிறைவேற்றி தரப்படும். இம்முறை சிறப்பான வெற்றி கிடைக்கும். 39 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சௌமியா அன்புமணி தெரிவித்தார்.