75வது குடியரசு தினம் : தேசிய கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
Jan 26, 2024, 08:21 IST1706237466637
75வது குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் தேசிய கொடியினை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ரவி.
75வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னையில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
சில நாட்களுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த வரலாற்று பூர்வமான நிகழ்ச்சி நாடு முழுவதிலும் சக்தியையும் ,உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் நல்ல ஆளுகைக்கான முழு பெரும் எடுத்துக்காட்டாக ராமராஜ்யம் உள்ளது என்று ஆளுநர் ரவி குடியரசு தினம் உரையில் குறிப்பிட்டார்.