பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த 77 நீதிபதிகள் அதிரடி பணி இடமாற்றம்

 
s s

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 77 நீதிபதிகள் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பூந்தமல்லி  வெடிக்குண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாகவும்,
சென்னை சிபிஐ  சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலன், சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணியாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை  போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமநாதன், கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி, விழுப்புரம் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும், அரசு சொத்தாட்சியர் லிங்கேசன், மயிலாடுத்துறை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கினை விசாரித்த கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். மே 13 ம் தேதி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு அறிவித்துள்ள நீதிபதி நந்தினி தேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.