'வீட்டிற்கோர் புத்தகச்சாலை' என்று பேரறிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம் - முதல்வர் ட்வீட்

 
tn

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்," கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-ஆவது பிறந்தநாளான இன்று, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று, அவரது புகழைப் போற்றினேன்.

tn

அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றது முதல், என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளையும் பொன்னாடைகளையும் தவிர்த்து, புத்தகங்களை அளித்திடச் சொல்லியிருந்தேன். அதன்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன்றரை இலட்சம் புத்தகங்களை தமிழ்நாட்டின் பல்வேறு நூலகங்களுக்கும், என்னிடம் புத்தகங்கள் வேண்டி கடிதம் எழுதியவர்களுக்கும் அளித்துள்ளேன்.



அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த #கல்விவளர்ச்சிநாள்-இல், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு நாள் என இந்நாளில், 'வீட்டிற்கோர் புத்தகச்சாலை' என்று பேரறிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.