தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு- மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்டத்திற்கு 8 நாட்கள் ஊரடங்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவனின் 309-ஆவது பிறந்த நாள் செப்டம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள மாவீரன் பூலித்தேவன் சிலைக்கும், சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20- ஆம் தேதி நடைபெற உள்ள ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கும் தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியையொட்டி தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஆகஸ்ட் 30 மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2 காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.