சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 பேர் பிடிபட்டனர்

 
s

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் மேலும் 8  பேர் பிடிபட்டுள்ளனர்.

Image

தேனி மாவட்ட சிறையில் இருந்து  சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி சென்றனர்.  17 கைதிகளில் மொத்தம் 13 கைதிகள் பிடிபட்டுள்ளனர் என  சிறைத்துறை தலைவர் சந்திப் ராய் ராதர் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளார். தப்பி ஓடிய கைதிகள்  காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பள்ளத்துக்குள் ஒளிந்துள்ளதாக ட்ரோன் காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது. அதன் பின்பு காவல்துறை அங்கு சென்று ஒளிந்திருந்த கைதிகளை கைது செய்தனர். இன்னும் 4 பேர் மட்டும் பிடிபடாமல் இருக்கிறார்கள். இன்று இரவுக்குள் பிடிப்பட்டு விடுவார்கள் என சிறைத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தமிழக காவல்துறை தனது எக்ஸ் தளத்தில், "தேனி கிளைச் சிறையிலிருந்து தப்பிய 13 கைதிகள் பிடிபட்டனர் தேனி கிளைச் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன. இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம் இதுவரை தப்பியோடிய 13 கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கைதிகளைக் கண்டறிந்து பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.