தமிழக மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை..

 
fishermen


எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் அதிமுக, பாமக, நாதக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 

மீனவர்கள்

ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை , எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.