மழை பாதிப்பு குறித்து முதல்வர் உத்தரவு - அமைச்சர் சொன்ன தகவல்!!

 
KKSSR Ramachandran

சென்னையில் 80 சதவீதம் மழை நீர் வடிகால் பணி நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.கே. எஸ். எஸ் .ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

KKSSR
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள  பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,  சென்னையில் 80 சதவீதம் அளவிற்கு மழை நீர் வடிகால் பணி நிறைவடைந்துள்ளது.  மழை  பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மழை நீர் வடிகால் பணிகளை முந்தைய அரசு கவனிக்க தவறியதே நீர் தேங்க காரணம். மழை எதிரொலியாக நிர்வாகப் பணிகளை சென்னையிலேயே இருந்து கவனிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

KKSSR

முடிச்சூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது .மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகங்களை தயார்படுத்தி உள்ளோம். பேரிடர் காலங்களுக்கான நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்குவதில்லை. தெருக்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கே.கே. நகரில் தண்ணீர் தேங்கவில்லை.  சென்னையில் ஐந்து நிமிடத்திற்கு மேல் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.