அரசு பேருந்துகளுக்கு விரைவில் 807 ஓட்டுநர்கள் நியமனம்..- தமிழக அரசு தகவல்..

 
தமிழக அரசு


அரசுப் பேருந்துகளுக்கு 807 ஓட்டுநா்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.  

இது குறித்து போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கே.கோபால் வெளியிட்ட உத்தரவில், “தமிழக போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா் காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா்-நடத்துநா் (இரண்டு பணியையும் சோத்துப் பாா்ப்பது) காலிப் பணியிட விவரங்களை அளிக்க இரண்டு போக்குவரத்துக் கழகங்களையும் தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

பேருந்து

 கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் 222 ஓட்டுநா்கள் காலிப் பணியிடங்களும், மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,494 ஓட்டுநா்-நடத்துநா் காலிப் பணியிடங்களும் உள்ளன; மொத்தமுள்ள 222 காலியிடங்களில் 203 இடங்களையும், 1,494 காலியிடங்களில் 800 இடங்களையும் நிரப்ப ஒப்புதல் அளிக்கலாம் என அந்தந்த போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் அரசுக்குப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.  காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் பரிந்துரைத்துள்ள 203 இடங்களில் 60 சதவீத ஓட்டுநா் பணியிடங்களை, அதாவது 122 இடங்களை நிரப்பிக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோன்று, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா்-நடத்துநருக்கான 800 பரிந்துரைக்கப்பட்ட காலியிடங்களில் 685 இடங்களை நிரப்பிக் கொள்ள நிதித் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஓட்டுநா் பணிக்கு 8-ஆம் வகுப்பு தோச்சி கட்டாயமாகும். கனரக வாகனங்களை இயக்கத் தெரிந்திருப்பதுடன், அதற்கான ஓட்டுநா் உரிமத்தையும், 18 மாதங்கள் முன் அனுபவத்தையும் பெற்றிருக்க வேண்டும். 160 செ.மீ. உயரமும், 48 கிலோ எடையும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 24-ஆகவும், பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 40-ஆகவும், இதர வகுப்பினருக்கு 45 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தோவில் வெற்றி பெறுவது அவசியம்.

ஓட்டுநா்-நடத்துநா் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்போா், 10-ஆம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 160 செ.மீ. உயரமும், 50 கிலோ எடையும் இருக்க வேண்டும். தெளிவான பாா்வைத் திறன் பெற்றிருக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பான அறிவிப்பு, செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.