பள்ளிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை - விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு?!

 
school

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை ஒட்டி ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்று.இந்த முறை கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தான் திறக்கப்பட்டது . அதிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தான் பள்ளிகள் இயங்கி வருகிறது.  இதனால் குறிப்பிட்ட பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க முடியாத சூழலில் ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

school

இதன் காரணமாக அரையாண்டுதேர்வு இந்த ஆண்டு நடைபெற வில்லை.  இருப்பினும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

school

முன்னதாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு  சம்பந்தமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாத நாள் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளது.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளான  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்,  அனைத்து கல்லூரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும்  சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.