தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

 
govt govt


 தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதிலும் திமுக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பின்னர் அடிக்கடி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்  செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

->சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி, ஊழல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

-> சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அனிஷா உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

transfer

-> சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் விஜயகுமார், சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

->கிழக்கு காவல்துறை இணை ஆணையராக பண்டி கங்காதர் நிமமனம் செய்யப்பட்டுள்ளார்.  

-> சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு வடக்கு இணை ஆணையராக சோனல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

-> சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக சுகாஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

-> புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சென்னை மாநகர தெற்கு  மண்டல  மத்திய குற்றப்பிரிவு மற்றும் புலனாய்வுத்துறை எஸ்.பியாக  ஷஜிதா நியமன செய்யப்பட்டிருக்கிறார்.