#BREAKING 9ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

 
dpi building

9ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

school

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில்,  கடந்த ஏப்ரல் 13ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு,  வருகிற ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பில் எந்த மாற்றமுமில்லை. திட்டமிட்டபடி ஜூன் 13ஆம் தேதி கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா அதிகரித்துவரும் நிலையில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ ?அல்லது விதிகள் பின்பற்ற வேண்டுமோ அதை மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை அடிப்படையில்,  முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை பின்பற்றுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

school

இந்நிலையில் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இறுதி தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் ஆல்பாஸ்  செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்று அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை,  இறுதித் தேர்வில் பங்கேற்காத  மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.  ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்பதை ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் , பள்ளி கல்வித்துறை தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.