ஆளுநர் உரையில் மரபு மீறல் - தலைவர்களின் பெயர்கள் முழுமையாக புறக்கணிப்பு

 
tn

நடப்பாண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் கூடியது. ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் வணக்கம் மற்றும் பொங்கல் வாழ்த்து கூறி  தனது உரையை தொடங்கி வைத்தார்.

tn

ஆளுநர் 50 நிமிடம் தனது உரையை வாசித்த நிலையில் சமூகநீதி ,சுயமரியாதை, திராவிடம் மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65 ஆவது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றுள்ளார். 
சமூக நீதி ,சுயமரியாதை ,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம் ,பெண்ணுரிமை, மத நல்லிணக்கம் , பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

tn

 தந்தை பெரியார் ,அண்ணல் அம்பேத்கர் ,பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும்,  கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல்  ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது என்பதை ஆளுநர் முழுமையாக தவிர்த்து விட்டார்