இலவச பேருந்தில் தகராறு - அதிமுகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

 
ttn

திமுகவினர் கொடுத்த புகாரின் பெயரில் அதிமுகவை சேர்ந்த மூதாட்டி துளசியம்மாள் வெளியிட்ட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ttn

தமிழகத்தில் சாதாரண பேருந்துகளில் பயணம் செய்ய பெண்களுக்கு கட்டணம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது இந்த சூழலில் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று திமுக அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்த துளசியம்மாள் என்ற மூதாட்டி ஓசியில் பயணம் செய்வதாக அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள் என்று கூறி நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சென்றார்.  இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. ஆனால் இந்த வீடியோ திட்டமிட்டு அதிமுகவினரால் பரப்பப்பட்டது என்றும் மூதாட்டி துளசியம்மாள் அதிமுகவை சேர்ந்தவர் என்றும் அவரை திட்டமிட்டு பேருந்திற்கு அழைத்து வந்து , வாக்குவாதத்தில் ஈடுபட வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பியது தெரியவந்தது.இந்நிலையில் அரசு பேருந்தில் ஓசியில் போக மாட்டேன் என்று நடத்துநரிடம் வாக்குவாதம் செய்து காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய மூதாட்டி துளசியம்மாள் உள்ளிட்ட நான்கு பேர் மீது கோவை மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மூதாட்டி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

"ஓசி" டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை @BJP4TamilNadu வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த @arivalayam அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.

— K.Annamalai (@annamalai_k) October 1, 2022



 இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது  ட்விட்டர் பக்கத்தில் , "ஓசி" டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை  தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த திமுக அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார்.