சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்த்து..

 
சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்த்து..

 கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தோழி  சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது.  

பொறியாளர் கோகுல்ராஜ் கொலை  வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி ஏற்கனவே கடந்த 25ம் தேதி  உயர்நிதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார். அப்போது   அவரிடம்  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர்.  நீதிபதிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு  சுவாதி  ‘தெரியாது’ என்றே பதிலையே அளித்தார்.  இதையடுத்து கோகுல்ராஜுடன் அவர் கோயிலுக்கு வந்தது, கோயிலை விட்டு வெளியே வந்தது உள்ளிட்ட காட்சிகளின் சிசிடிவி பதிவுகளை காட்டி கேட்டபோது,  டிவியில் உள்ளது கோகுல்ராஜ்தான். ஆனால் அவருடன் செல்லும் பெண் நான் இல்லை’ என்று   மீண்டும், மீண்டும் கூறினார்.  

 கோகுல்ராஜ் கொலை வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு.. சுவாதி மீண்டும் ஆஜராக உத்தரவு.. 

இதனையடுத்து சுவாதிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக  கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்றைக்கு ( நவ 30)க்கு ஒத்தி வைத்தனர்.  கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது என்றும், உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் வரும் என்றும் எச்சரித்திருந்தனர்.  இந்நிலையில் சுவாதி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.     அப்போது கடந்த 25 ஆம் தேதி தான் கொடுத்த பிறழ் சாட்சியத்தில் உறுதியாக இருப்பதாக சுவாதி தெரிவித்திருக்கிறார்.  சுவாதி தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க விசாரணையை   2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  சாட்சிய சட்டத்தின்  படி சுவாதியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு அது பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

 கோகுல்ராஜ் கொலை வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு.. சுவாதி மீண்டும் ஆஜராக உத்தரவு.. 

இந்நிலையில்,  சிசிடிவி காட்சிகளை காண்பித்தும் சுவாதி முறையாக பதில் அளிக்கவில்லை,  உண்மையை சொல்ல மறுக்கிறார் என்று நீதிபதிகள் கூறினார். சிசிடிவி யில் இருப்பது சுவாதி தான்  என சரியாக தெரிகிறது.  இருந்தும் நான் இல்லை என்று ஏதோ காரணத்திற்காக  கூறிவிட்டார். சுவாதிக்கு ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து அழுத்தம் வருகிறது என்றும்  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  ஒருவர் பொய்சாட்சி வழங்கி,  அதை நீதிமன்றம் கடந்து சென்றால்  நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து விடும் என்றும்,  நீதிமன்றத்தில் தவறான சாட்சியம் அளித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பிறழ் சாட்சி அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது.