திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்... சாலையில் நடந்து சென்ற பெண் வங்கி ஊழியர் பலி..

 
திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்... சாலையில் நடந்து சென்ற பெண் வங்கி ஊழியர் பலி..


சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து  விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாத பழைய கட்டிடங்கள் ஏராளமானவை அமைந்துள்ளன.  இந்நிலையில் இன்று  பழைய கட்டிடம் ஒன்று  திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை  அண்ணாசாலையில், ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டிடம் ஒன்றை ஆய்வு செய்து நேற்றைய தினம் தான் , இடிக்க முடிவு செயப்பட்டு தயராக  வைக்கப்பட்டது.  இன்று  ஜேசிபி இயந்திரம்மூலம் சுவர் இடிக்கும் பணியின்போது, கட்டிடத்தின் ஒரு பகுதி தானாகவே இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.  

திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்... சாலையில் நடந்து சென்ற பெண் வங்கி ஊழியர் பலி..

அந்த நேரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இடிபாடுகளில் பெண் உள்பட சிலர் இடிபாடுகளில் சிக்கினர். இதனையடுத்து தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணிகளில் இறங்கினர்.  இதில் பெண் வங்கி ஊழியர்  பரிதாபமாக உயிரிழந்தார்.  20 நிமிடங்களுக்குப் பிறகு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட  வங்கி ஊழியர் பிரியா சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அவர்  ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

 இதில் காடயமடைந்த மேலும்  2 பெண்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த கட்டிட விபத்தினால் அண்ணாசாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் 1 கி.மீ தூரம் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. கட்டிடடத்தின் உரிமையாளர் யார் என்றும் கட்டிட விபத்து நடந்தது குறித்தும் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.