கடலூரில் பேருந்தின் டயருக்கு கீழே தலையை வைத்து தற்கொலை
கடலூரில் பேருந்து டயருக்கு கீழே தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அருகே உள்ள உண்ணாமலை செட்டி சாவடி பனங்காட்டு காலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி பவானி மற்றும் குழந்தை கௌதம் ஆகியோருடன் கடலுக்கு சென்றுள்ளார். கடலூர் சில்வர் பீச்சில் இவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது குழந்தை மற்றும் மனைவி கண்ணெதிரே கடலில் அடித்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு பவானியின் உடல் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் அன்று முதல் மனம்நலம் பாதிக்கப்பட்டு இருந்த குணசேகரன் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தையை தற்பொழுது அவர்களது தாத்தா - பாட்டி பராமரித்து வரும் நிலையில், கடந்த 7ம் தேதி கடலூர் சாவடி பேருந்து நிறுத்தத்தில் காலையில் குணசேகரன் தற்கொலைக்கு ஒரு தனியார் பேருந்தில் முயன்றுள்ளார். பேருந்து புறப்படும் நேரத்தில் டயருக்கு கீழே தனது தலையை வைத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அதனை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் குணசேகரனை அடித்து அனுப்பிவைத்தனர்.
அன்று மாலையை அதே பேருந்து நிறுத்தத்திற்கு மீண்டும் வந்த குணசேகரன் மற்றொரு தனியார் பேருந்து புறப்படும் நேரத்தில் திடீரென கீழே விழுந்து தனது தலையை டயருக்கு கீழே வைத்துள்ளார். இதில் தலை சிதறி அதே இடத்தில் குணசேகரன் உயிரிழந்த நிலையில் இந்த இரண்டு பரபரப்பு சிசிடிவி காட்சிகளும் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.