தட்டச்சு பயிற்சிக்கு சென்ற மாணவி தனியாக வீடு எடுத்து இளைஞருடன் குடித்தனம்

 
m

 தட்டச்சு பயிற்சிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்ததால் போலீசாரின் தீவிர தேடலில்  இளைஞர் ஒருவர் அந்த மாணவியை காதலிப்பதாக சொல்லி அழைத்துச்சென்று திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்திருக்கிறது.  அவரிடமிருந்து அந்த சிறுமி மீட்கப்பட்டிருக்கிறார்.  இதை எடுத்து அந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் .

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அடுத்த பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆசிரியரின் மகள் 17 வயது மகள் பிளஸ் 1 படித்து முடித்துவிட்டுதினமும் தட்டச்சு பயிற்சி வகுப்புக்கு சென்று வந்திருக்கிறார்.   சம்பவத்தன்று தட்டச்சு பயிற்சி வகுப்புக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவே இல்லை.  இதனால்  குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்திருக்கிறார்கள்.

bg

 எங்கேயும் இல்லாததால் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.   அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  காணாமல் போன சிறுமையை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.   போலீசாரின் விசாரணையில் கோவை பட்டணம் புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் என்கிற 22 வயது இளைஞர்தான் சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த அருண்பாண்டியன் வேலை விஷயமாக பாளையம்பட்டி சென்றிருந்தபோதுதான் அந்த மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.   அந்த பழக்கத்தில் மாணவியை காதலிப்பதாக சொல்லி ஆசை வார்த்தைகள் சொல்லி அழைத்துச் சென்று இருக்கிறார்.   இந்த விபரங்கள் தெரிய வந்ததும் தனிப்படை போலீசார் கோவை சென்றார்கள்.   அங்கு வாலிபர் அருண்பாண்டியன் சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரிய வந்திருக்கிறது. 

 இதன் பின்னர் அருண் பாண்டியன் சிறுமி இருவரிடமும் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் அருண்பாண்டியடைய கைது செய்துள்ளனர்.   சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைத்துள்ளனர் போலீசார்.