சென்னையில் ஹார்டுவேர் குடோனில் பயங்கர தீ விபத்து...

 
சென்னையில் ஹார்டுவேர் குடோனில் தீ விபத்து...

சென்னை மண்ணடியில் உள்ள ஹார்டுவேர் குடோனில் திடீரென  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2.30 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. 

சென்னை மண்ணடியில் உள்ள முத்துமாரி தெருவில் பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள் அடங்கிய 'பாம்பே ஹார்டுவேர்' பிரைவேட் லிமிடெட் என்ற குடோன் அமைந்துள்ளது. சுமார் 2000 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த குடோனில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

fire

தகவல் அறிந்து  50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 6 தீயணைப்பு வாகனங்களில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேரம்  வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சென்னை வட மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தீ விபத்து நடந்த குடோனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இரவு சுமார் 9 மணிக்கு தொடங்கிய தீயணைக்கும் பணியானது, 2.30  மணிநேர கடும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது.  முதற்கட்ட விசாரணையில்,  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகையால்,  அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  குறிப்பாக குடோனின் அருகாமையில் இருந்த வீடுகளில் அணல் காற்றோடு கரும்புகை பரவி அதிக  பாதிப்பை ஏற்படுத்தியது.