கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்கா விலையை கட்டுப்படுத்திடுக - ஓ.பி.எஸ்

 
ops

கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்கா விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறியதாவது :  கட்டுபானப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து விஷம் போல் எதிக்கொண்டே செல்வதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வீடு வாங்கும் நோக்கம் சிதைந்து போயுள்ளதையும், அந்தத் துறையே முடங்கும் நிலைக்கு வந்துள்ளதையும் பார்க்கும்போது "விட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப் பார்" என்ற பழமொழிதான் அனைவர் நினைவிற்கும் வருகிறது.கடந்த பத்து மாத காலமாக வீடு சுட்டுவதற்குத் தேவையான இரும்பு கம்பி, சிமெண்ட் செங்கல், எம்.சாண்ட் மாம், நீங்கான் பொருட்கள், பினாஸ்டிக் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன. கடந்த நான்கு” மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் மீளல் விலை தற்போது ஒரு இலட்சம் ரூபாய்க்கும், 365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் 450 ரூபாய்க்கும். 9 ரூபாய் 50 சாசுக்கு விற்பனை செய்யப்பட்ட செங்கல் 11 ரூபாய் 50 காசுக்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது என நாளிதழில் செய்திகள் வந்துள்ளன. 

ops

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள விலையோடு ஒப்பிடுகையில், மரத்தின் விலை மட்டும் 35 விழுக்காடு உயர்ந்திருப்பதாகவும், குழாய்களின் விலை 20 விழுக்காடு உயர்ந்து இருப்பதாகவும், மின் சாதனங்களின் விலை 10 விழுக்காடு உயர்ந்து இருப்பதாகவும், சிக்கனமான பட்ஜெட்டில் வீடு சுட்டுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வழக்கத்திற்கு மாறான இந்த விலை உயர்வு கட்டுமான தொழிலையே முடக்கிப் போட்டுள்ளதாகவும், வீடு கட்டுவதற்கான செலவு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 25 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், இரும்பு விலை உயர்விற்கு உக்ரைன் போர் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், மற்ற பொருட்களின் விலை உயர்ந்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

ops

இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் விலையும் 10 விழுக்காடு உயர்ந்து இருக்கிறது என்றும் அத்தொழிவில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் பாதிக்கப்படுவர்கள் ஏழை, எளிய, நடுத்தா மக்கள்தான். எனழ மக்களின் வீடு கட்டும் கனவு நிறைவேற வேண்டுவென்றால், கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் . கட்டாயம், அதனைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. வாணிபம் என்ற பெயரில் கொள்ளை இலாபம் ஈட்டுவோரையும், பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரையும் கண்டறிந்து: தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டுமென்றால் அதனை மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. எனவே. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதில உடனடியாகத் தலையிட்டு, கட்டுமானப் பொருட்களின் விலையினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.