வரும் 17ஆம் தேதி கூடுகிறது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!!

 
ep

 அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம்  ஜூலை 17ம் தேதி கூடும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.

admk office

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  அத்துடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம்,  அடிப்படை உறுப்பினர் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள ஓபிஎஸ் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

admk

இந்நிலையில்  குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் இல்லத்தில் ஜூலை 17ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்  பதவியேற்றபின் முதன்முறையாக அதிமுக எம்எல்ஏக்கள்  கூட்டம் அவரது இல்லத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வருகிற 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுக பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

admk

இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஈபிஎஸ் அறிவித்துள்ளார். ஜூலை 17ம் தேதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டமும்  காலை 10.30 மணியளவில் சென்னை , அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்" நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.