இன்று மாலை நடைபெறுகிறது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..

 
 இன்று மாலை நடைபெறுகிறது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..


அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைக் கழகத்தில் நடைபெற உள்ளது.  ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும்  பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.   ஆனால் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே  அதிமுகவினர் பேச அனுமதிகேட்டு அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் கைது  மற்றும் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிமுகவினர் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பும்  செய்தனர்.

உள்ளாட்சி தேர்தல்… 6 பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக!

இந்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்   தாக்கல் செய்தார். பின்னர் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்  மீதான  விவாதம் நடைபெற உள்ளது. அப்போது காரசாரமான விவாதத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் யார் யார் பேச உள்ளனர் என்பது  இனிதான் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக-வில் யாரும் முதல்வராகலாம் என்பதற்கு ஈபிஎஸ் சாட்சி: சீண்டும் ஓபிஎஸ்

யார் பேச உள்ளனர், என்ன பிரச்சனைகள் எழுப்ப வேண்டும் என்பதை  முடிவு செய்வதற்காகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக்த்தில் நடைபெறுகிறது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில்  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.