பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு

 
admk

அதிமுகவினர் மீதான கைது, ரெய்டு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
சபாநாயகர் அப்பாவு திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார்.நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

budget

முன்னதாக பட்ஜெட் கூட்டதொடரை முன்னிட்டு அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார் .பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக செயல்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைற்ற ஆலோசனையில் ஓபிஎஸ் பங்கேற்றார். 

budget

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்ட நிலையில் சபாநாயகர் அப்பாவு நிராகரித்ததால் அவையில் அதிமுகவினர் கூச்சல் போட்டனர். மேலும் ஜனநாயகப் படுகொலையில் திமுக அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டிய அக்கட்சியினர், அதிமுகவினர் மீதான கைது, ரெய்டு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். பின்னர் பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.