ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது

 
admk office

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடார்பான் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில்  கூட்டம் நடைபெற்று வருகிறது.  

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி  காலை 10 மணிக்கு, சென்னை , வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  தற்காலிக அதிமுக  அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்  தலைமையில் நடைபெற உள்ளது.  இதற்காக அதிமுக  செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து 14ம் தேதி கட்சியின் தலைமை அலுவகத்தில் ஆலோசனை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

ops eps

அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடர்பான ஆலோசிப்பதற்கான கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்.பி. மைத்ரேயன் செல்போனுடன் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உள்ளே சென்றுள்ளார். இந்நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் செல்போனுடன் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. செல்போனுக்கு அனுமதி மறுப்பால் ஆத்திரமடைந்த அவர், ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார். முன்னாள் எம்.பி. ஒருவர் செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று கூறிய காரணத்திற்காக கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்த்தியுள்ளது.